அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக இறங்கிய கொள்ளையர்கள்..!! 40 சவரன் நகையுடன் போலீசில் சரண்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 28, 2019, 11:49 AM IST
Highlights

இதானல்  சுண்ணாம்பு அடிக்க பயன்படுத்தும் கயிறு மூலமாக  வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. 

முகப்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல் வழியாக புகுந்து 40 பவுன் நகை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தினகரன்  இவரது மனைவி வசந்தகுமாரி(70), இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வரும் தனது மகள் திவ்யாவை பார்க்க சென்றுவிட்டனர். மேலும் சின்ன நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி (40), என்ற பெண்ணை மாதம் ஒருமுறை வீட்டை திறந்து சுத்தம் செய்ய வேலைக்கு அமர்த்தி விட்டு சென்றுள்ளனர். 

வள்ளி வீட்டை திறந்து சுத்தம் செய்ய உள்ளே சென்ற போது பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நொளம்பூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கைரேகைகளை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை அடித்த நகைகளுடன் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த அருண்(28), ராஜ்குமார்(23), ஆகிய 2 பேரும் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். விசாரணையில் இருவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாட்டர் பிளான்டில் பணிப்புரிந்து வந்ததாகவும்,  நீண்ட நாட்களாக பணிப்புரிந்து வந்ததால் சுதந்திரமாக வீடுகளுக்குள் சென்று வந்ததாகவும்,   பல மாதங்களாக அந்த வீடு பூட்டி கிடந்ததாகவும் தீபாவளி செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த வீட்டினுள் சென்று கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். 

 

இதானல்  சுண்ணாம்பு அடிக்க பயன்படுத்தும் கயிறு மூலமாக  வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே சென்று பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. போலிசார் விசாரணையை தீவிரப்படுத்துவதையும், அவர்கள் தங்களை நெருங்கி விடுவார்களோ என்ற பயத்தில் காவல்நிலையத்தில் வந்து சரணடைந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
 

click me!