எந்த நேரமும் செல்போனில் கடலை போட்டுக்கொண்டிருந்த தங்கை.. ஆத்திரத்தில் வெட்டி படுகொலை செய்த அண்ணன்..!

Published : Nov 19, 2020, 04:54 PM IST
எந்த நேரமும் செல்போனில் கடலை போட்டுக்கொண்டிருந்த தங்கை.. ஆத்திரத்தில் வெட்டி படுகொலை செய்த அண்ணன்..!

சுருக்கம்

நெல்லை அருகே எந்தநேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கையை அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை அருகே எந்தநேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கையை அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, குட்டிதாஸ் அரிவாளுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பெருமாள்புரம் போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரிடம் குட்டிதாஸ் அளித்த வாக்குமூலத்தில் எனது தங்கை சரஸ்வதி நர்சிங் விட்டு வேலைக்கு செல்கிறேன் என கூறி கொண்டு கவரிங் நகை விற்பனையில் ஈடுபட்டார். மேலும், டெய்லரிங் எம்பிராய்டரி பொருட்களை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். எனது பேச்சை கேளாமல் அடிக்கடி விற்பனை எனக்கூறி கொண்டு சிலரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை நான் கண்டித்தேன் பொருட்கள் விற்பனை வேண்டாம் என கூறினேன். அதை அவள் கேட்காததால் வெட்டி கொன்றேன் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!