மது அருந்த அனுமதி மறுத்த நட்சத்திர விடுதி..! ஹோட்டல் கேட்டை உடைத்தெறிந்த இளைஞர்...! பரபரப்பு வீடியோ

Published : Apr 06, 2022, 04:30 PM ISTUpdated : Apr 06, 2022, 04:56 PM IST
மது அருந்த அனுமதி மறுத்த நட்சத்திர விடுதி..! ஹோட்டல் கேட்டை உடைத்தெறிந்த இளைஞர்...! பரபரப்பு வீடியோ

சுருக்கம்

மது அருந்த அனுமதி மறுத்த  நட்சத்திர விடுதி கேட்டை, கார் மூலம் இளைஞர் ஒருவர் உடைத்தெறிந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மது அருந்த அனுமதி மறுப்பு

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள மதுபான விடுத்திக்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். தனக்கு மதுபானம் தரும்படி ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே அதிக மது போதையில் பிரச்சனை செய்த காரணத்தால் மதுபானம் தர மடியாது என்றும் வயது குறைவாக இருப்பாதகவும் பார் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்  மதுபான விடுதி ஊழியர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். 

ஹோட்டல் கேட்டை உடைத்த இளைஞர்

இதனால்  ஆத்திரமடைந்த நபர், கோபத்தில் விடுதியில் இருந்த நாற்காழியை தூக்கி எறிந்து சென்றுள்ளார். இதனையடுத்து பார்க்கிங் பகுதிக்கு சென்ற அந்த இளைஞர் தனது காரை வேகமாக இயக்கி ஓட்டல் கேட் மீது வேகமாக மோதியுள்ளார். இதனை தொடர்ந்து பரபரப்பாக இயங்ககூடிய கத்திப்பாரா சாலைக்குள் காரை நிற்காமல் ஓட்டியுள்ளார். காரில் இரும்பு கேட் சிக்கிய காரணத்தால் கார் மேற்கொண்டு நகரமுடியாமல் நடு ரோட்டில் நின்றது.  இதன் காரணமாக விமான நிலையத்திற்கு பயணிகள் செல்லக்கூடிய பரபரப்பு மிக்க சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், காரில் அடிபட்டுக் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அந்த காரையும், கேட்டையும் சாலையிலிருந்து நீக்கி போக்குவரத்தைச் சரிசெய்தனர். 

வீடியோ வெளியாகி பரபரப்பு

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காரை ஓட்டியது, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் ஆகாஷ் என்பது தெரியவந்தது. வயது குறைவாக இருந்த காரணத்தினாலும், ஏற்கனவே அதிக மது போதையில் இருந்த காரணத்தால் பாருக்குள் மது அருந்த அனுமதிக்கவில்லை. என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து நட்சத்திர விடுதி கேட்டை உடைத்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய காரணத்தாலும் அந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மது போதையில் காரை ஓட்டி நட்சத்திர விடுதி கேட்டை உடைத்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!