தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்அப் மரணம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு சம்பவம்

Published : Jun 26, 2022, 01:54 PM IST
தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்அப் மரணம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

Kanyakumari : காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லாக்அப் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். பால்வடிக்கும் தொழிலாளியான   இவரது மகன் அஜித் (22) ஐடிஐ முடித்து மினி லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்

இரண்டு மாதம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்த அஜித் குலசேகரம் காவல்நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் குலசேகரம் காவல்நிலைய தனிப்பிரிவு காவலர்  சோனல் பிரதீப் இளைஞர் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியுள்ளார். 

கன்னியாகுமரி

அதை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்கு சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். அதன் பிறகு அஜித்  விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் உள்ளதாகவும் கூறி  தந்தை சசிகுமாரை அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார். 

இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?

இதையடுத்து தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என கூறி அஜித்தின் தந்தை சசிகுமார் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்து போடசென்ற இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி