’ஆபாச வீடியோ’ புருஷனுக்கு அனுப்பட்டுமா..? முன்னாள் காதலியை கதற கதற கற்பழித்த காதலன் !!

By Raghupati R  |  First Published Apr 3, 2022, 8:23 AM IST

திருமணத்துக்கு பிறகு காதலியை போனில் அழைத்து பேசிய சாம்சன் ராஜ், உனது ஆபாச படம் மற்றும் வீடியோ என்னிடம் உள்ளது. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 


முன்னாள் காதலன் - காதலி சந்திப்பு :

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும், புழல் காவங்கரை பகுதியை சேர்ந்த சாம்சன் ராஜ் என்ற வாலிபரும் மாதவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒன்றாக படித்தனர். அப்போது இளம்பெண்ணுக்கு 16 வயதே ஆகி இருந்தது. பள்ளி பருவத்தில் இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், சாம்சன் ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த திருமணம் நடந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு மாதவரத்தில் தான் படித்த பள்ளி அருகே வைத்து காதலியை சாம்சன் ராஜ் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த சாம்சன் ராஜ், மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆள் இல்லாத ஒரு வீட்டுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் காதலியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

ஆபாச வீடியோ :

இதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு காதலியான இளம்பெண்ணுக்கும் திருமணமானது. திருமணத்துக்கு பிறகு காதலியை போனில் அழைத்து பேசிய சாம்சன் ராஜ், உனது ஆபாச படம் மற்றும் வீடியோ என்னிடம் உள்ளது. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலி, சாம்சன் ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் வைத்தே மிரட்டி காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதன் பின்னர் பலமுறை சாம்சன்ராஜ், போனில் தொடர்பு கொண்டு பேசி, தான் கூப்பிடும் போதெல்லாம் தனியாக வரவேண்டும் என்றும், அப்படி வரவில்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் காதலனின் தொல்லை எல்லை மீறி சென்றதால் மாதவரம் பால் பண்ணை போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் சாம்சன் ராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சாம்சன்ராஜை கைது செய்தனர்.

click me!