கணவனை மனைவியுடன் சேர விடாத மாமியார்.. குழவிக் கல்லை தலையில் போட்டு கொன்ற மருமகன் - அதிர்ச்சி சம்பவம்

Published : May 28, 2022, 12:54 PM IST
கணவனை மனைவியுடன் சேர விடாத மாமியார்.. குழவிக் கல்லை தலையில் போட்டு கொன்ற மருமகன் - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (40). கணவனை இழந்த கூலித் தொழிலாளியான இவருக்கு ஆர்த்தி என்ற மகளும், வசந்த குமார் என்ற மகனும் உள்ளனர். 

கணவன் - மனைவி சண்டை 

இதில் ஆர்த்தியை கடந்த 3 வருடங்களுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவர் ஒரு தலையாய் காதலித்து பிறகு கோகிலாவிடம் பெண் கேட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். திருமணம் ஆன ஒரு வாரத்தில் கார்த்திக்கு ஜன்னி வந்ததால் பயந்து போன ஆர்த்தி தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த கார்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாமியார் வீட்டிற்கு பின்பக்கத்தில் குடி வந்துள்ளார்.

தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய கார்த்தி அதற்கு மாமியார் கோகிலா தடையாக இருப்பதாக கருதி சண்டையிட்டு வந்துள்ளார். ஆர்த்தியை தேடி செல்லும் போதெல்லாம், கார்த்திக்கும் மாமியார் கோகிலாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக மாறியது. சம்பவத்தன்றும் அதேதான், வழக்கம் போல மருமகனும் மாமியாரும் வாக்குவாதத்தில் ஈடுபட எல்லைமீறிப் போனது. இந்நிலையில் ஆர்த்தி வேலை செய்துவரும் கடைக்கு சென்று அழைத்து வர ஆர்த்தியின் தம்பி வசந்தகுமார் சென்றிருந்த நிலையில் மாமியார் கோகிலா தலையில் குழவிக் கல்லை கொண்டு தாக்கியுள்ளார். 

மாமியார் கொலை

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியாரை கொன்றுவிட்டு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த கார்த்தியை தகவல் அறிந்து வந்த போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். மனைவியுடன் வாழ விடவில்லை என மாமியார் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!