
ஆன்லைன் கேமில் அடிமையாகும் சிறுவர்கள்
PUBG விளையாட்டு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து வயதினரையும் அடிமைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த விளையாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வேறு பெயரிலையோ அல்லது பப்ஜி போன்று வெறு விளையாட்டிலோ இளைஞர்கள் அடிமையாகி தங்களது வாழ்க்கையை வீண்டித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டின் மோகம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் தனது நண்பர்களோடு இணைந்து பப்ஜி விளையாண்டுள்ளான். இதில் ஆர்வமாக விளையாடிய அந்த மாணவன் ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்து அந்த போட்டியில் இருந்து வெளியேறியுள்ளான்
தூக்கிட்டு சிறுவன் தற்கொலை
இந்த நிலையில் அந்த மாணவனின் நண்பர்கள் PUBG விளையாட்டில் தோல்வி அடைந்ததை கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனால் வேதனையடைந்த அந்த மாணவன் வீட்டிற்கு சென்று மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று கடந்த வாரம், லக்னோவில், 16 வயது சிறுவன், PUBG போன்ற ஆன்லைன் கேம்களை விளையாடவிடாமல் தடுத்ததால், ராணுவத்தில் இருக்கும் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது தாயை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இது போன்று சிறுவர்களை அடிமைப்படுத்தும் PUBG போன்ற விளையாட்டுகள் உயிரைப் பறிப்பதால் மாநில மற்றும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்