பட்டப்பகலில் பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை... இளைஞர் வெறிச்செயல்..!

Published : Nov 04, 2019, 05:02 PM ISTUpdated : Nov 04, 2019, 05:18 PM IST
பட்டப்பகலில் பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை...  இளைஞர் வெறிச்செயல்..!

சுருக்கம்

தெலங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி. இன்று அவர் வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அவரது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்த மர்ம நபர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். 

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விஜயாவின் உடல் முழுவதும் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. இதனையடுத்து, பெண் தாசில்தார் விஜயா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாசில்தார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை வாலிபர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

PREV
click me!

Recommended Stories

புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?
காதல் கல்யாணம் பண்ண மூன்றே மாசத்துல என் பொண்ண கொன்னுட்டாங்களே! நெஞ்சில் அடித்து கதறும் தாய்