நீ அழகாவா இருக்க ? கர்ப்பிணி பெண்ணை கழிவறை கிளீனரை குடிக்க வைத்த கணவன்..துடிதுடித்து இறந்த மனைவி !

Published : Apr 29, 2022, 02:29 PM IST
நீ அழகாவா இருக்க ? கர்ப்பிணி பெண்ணை கழிவறை கிளீனரை குடிக்க வைத்த கணவன்..துடிதுடித்து இறந்த மனைவி !

சுருக்கம்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தருண் என்பவர் கல்யாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன் கல்யாணி கர்ப்பமானபோது, ​​தருண் அவரை துன்புறுத்த ஆரம்பித்தார். அவர் அழகாக இல்லை என்று சொல்லியும், வரதட்சணை கேட்டு குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள வர்னி மண்டலில் உள்ள ராஜ்பேட் தாண்டாவில் கடந்த புதன்கிழமை ஒரு பெண், கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தைக் குடிக்கக் கணவர் வற்புறுத்தியதால் உயிரிழந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தருண் என்பவர் கல்யாணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மூன்று மாதங்களுக்கு முன் கல்யாணி கர்ப்பமானபோது, ​​தருண் அவரை துன்புறுத்த ஆரம்பித்தார். அவர் அழகாக இல்லை என்று சொல்லியும், வரதட்சணை கேட்டு குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை தருண் கல்யாணியை குடிக்க வைத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். கல்யாணியின் உறவினர்கள் தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தருண் மற்றும் இரண்டு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பல்டி அடித்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. கொடநாடு கொலை வழக்கில் சிக்குவது யார் ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!