தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு 4 நாட்களாக மாணவனுடன் உல்லாசமாக இருந்த டீச்சர்! சென்னையில் கைது...

Published : Sep 28, 2018, 06:26 PM ISTUpdated : Sep 28, 2018, 06:34 PM IST
தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு  4 நாட்களாக  மாணவனுடன் உல்லாசமாக இருந்த டீச்சர்! சென்னையில் கைது...

சுருக்கம்

கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவனைக் காதலித்து, அந்த மாணவனுடன் சென்னை  தனியார் விடுதியில் தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு  4 நாட்களாக  தங்கியிருந்த  40 வயது பள்ளி ஆசிரியையை அம்மாநில போலீசார் அழைத்துச் சென்றனர்.

கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவனைக் காதலித்து, அந்த மாணவனுடன் சென்னை  தனியார் விடுதியில் தங்கியிருந்த  40 வயது பள்ளி ஆசிரியையை அம்மாநில போலீசார் அழைத்துச் சென்றனர்.

கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள இடம் சேர்த்தலா முகம்மா. இங்கு ஒரு தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஃபெரோனா. 40 வயது. திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

40 வயது பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி. சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியையான இவர் 10 வகுப்பு மாணவனுடன் முறையற்ற உறவை மேற்கொண்டிருந்ததாகவும், இந்த பழக்கம் வீட்டிற்க்கே அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் மாணவனின் வீட்டிற்கு தெரிந்ததால் ஆசிரியரை கடுமையாக திட்டியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த ஆசிரியை பள்ளிக்கு போகாமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மாணவனைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் தேடி வந்த கேரள போலீசார் செல்ஃபோன் சிக்னல் மூலம் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சென்னை வந்த கேரள போலிசார் சூளைமேடு போலீசாரின் உதவியோடு தேடி வந்தனர். விடுதி ஒன்றில் ஓய்வெடுக்கச் சென்ற கேரள போலீசார் அங்கு புகைப்படங்களை காண்பித்து விசாரித்த போது இருவரும் தாய் - மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக தங்கியிருப்பது தெரியவந்தது. சி.பி.எஸ்.இ. பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..