சுவிக்கி நிறுவன முதன்மைத் திட்ட மேலாளராக திருநங்கை நியமனம் !! குவியும் வாழ்த்துகள் !!

Published : Jul 12, 2019, 05:56 PM IST
சுவிக்கி நிறுவன முதன்மைத் திட்ட மேலாளராக திருநங்கை நியமனம்  !! குவியும்  வாழ்த்துகள் !!

சுருக்கம்

விக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தைச் சேர்ந்த  திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் சுவிக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது.  

சுவிக்கி நிறுவனம் தனது முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்பவரை நியமித்துள்ளது. தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். தற்போது இவர் சுவிக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி