நடத்தையில் சந்தேகம்.. தாலி கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கையொடு கணவர் செய்த காரியம்.!

Published : Aug 23, 2021, 01:18 PM IST
நடத்தையில் சந்தேகம்.. தாலி கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கையொடு கணவர் செய்த காரியம்.!

சுருக்கம்

கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிஷ் மனைவியின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தாலி கட்டிய மனைவியை துடிதுடிக்க கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வந்தவர் ஜோதிஷ் (28). இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கும், கர்நாடக மாநிலம் ஜிகினியை சேர்ந்த வந்தனா (25) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லத்தீஷ் (6) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

நேற்று முன்தினம் மாலை குழந்தை லத்தீஷ் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதிஷ் மனைவியின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

இதனையடுத்து, ஜோதிஷ் போலீஸ் நிலையத்தில், மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலமாக கிடந்த வந்தனாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஜோதிசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!