ஏன் லேட்…? மாணவரை கேள்வி கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்… எந்த ஊரில் தெரியுமா..?

Published : Sep 20, 2021, 07:31 PM IST
ஏன் லேட்…? மாணவரை கேள்வி கேட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்… எந்த ஊரில் தெரியுமா..?

சுருக்கம்

தலைநகர் டெல்லியில் வகுப்புக்கு ஏன் லேட்டாக வந்தாய் என்று கேட்ட பள்ளி ஆசிரியரை மாணவர் ஒருவர் இரும்பு தடியால் மண்டையை பிளந்திருக்கிறார்.

டெல்லி: தலைநகர் டெல்லியில் வகுப்புக்கு ஏன் லேட்டாக வந்தாய் என்று கேட்ட பள்ளி ஆசிரியரை மாணவர் ஒருவர் இரும்பு தடியால் மண்டையை பிளந்திருக்கிறார்.

டெல்லியில் ரன்ஹேலா பகுதியில் அரசு ஆண்கள் சீனியர் செகண்டரி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக இருப்பவர் விக்ராந்த். பள்ளியில் ஸ்ட்ரிக்ட் ஆசிரியர் என்று பெயர் எடுத்தவர். சில நாட்களுக்கு முன்னர் சக ஆசிரியர் சுரேந்திராவுடன் அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர் விக்ராந்தை தாம் மறைத்து வைத்திருந்த இரும்பு தடியால் மண்டையை பிளந்திருக்கிறார். அடுத்த நொடியில் அங்கிருந்து மாணவர் சிட்டாய் பறந்திருக்கிறார். திடீர் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

ஒரு வழியாக சுதாரித்து, விக்ராந்தை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூற அனைவரும் அதிர்ந்து போயினர்.

பின்னர் கண்விழித்த அவரிடம் நடந்தது என்ன என்பதை போலீசார் விசாரித்து உள்ளனர். விஷயம் இதுதான்… அடிக்கடி அந்த மாணவர் பள்ளிக்கு லேட்டாக வந்ததால் ஆசிரியர் கண்டித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆசிரியர் கண்டிப்பு மாணவரை வெறுப்பேற்ற இரும்பு தடியால் மண்டையில் ஒரு காட்டு காட்டியிருக்கிறார் என்பது தெரியவந்தது.

கேள்வி கேட்ட ஆசிரியரை பழிவாங்க நினைத்து தாக்குதல் நடத்திய மாணவர் பின்னர் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேள்வி கேட்டதற்கான ஆசிரியரை இரும்பு தடியால் அடித்த சம்பவத்துக்கு கல்வியாளர்கள் பலரும் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!