தொடர்ந்து அழுது தொந்தரவு செய்த கைக்குழந்தை !! ஆத்திரத்தில் துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் !!

Published : Nov 23, 2019, 10:39 PM IST
தொடர்ந்து அழுது தொந்தரவு செய்த கைக்குழந்தை !! ஆத்திரத்தில் துணியால் அமுக்கி கொன்ற கொடூர தாய் !!

சுருக்கம்

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் அழுது கொண்டிருந்த குழந்தையை துணியால் அமுக்கி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் வாலாஜா திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரிசங்கர் மனைவி அம்மு என்கிற பவித்ரா இவரது மகள்கள் ரம்யா , மற்றும் ஒன்றரை வயது  மவுலிகா. . கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த பவித்ரா குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. நேற்று இரவு குழந்தை மவுலிகா அழுதுகொண்டே இருந்தது. அதனை சமாதானம் செய்ய பவித்ரா முயன்றுள்ளார். அழுகை நிறுத்தாததால் துணியால் குழந்தையின் வாயை அமுக்கியுள்ளார்.

அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மவுலிகா மயங்கியது. இதனால் திடுக்கிட்ட பவித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் அதியமான் இது பற்றி வாலாஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து பவித்ராவை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை