பீக் ஹவரில் பயங்கர துப்பாக்கி சூடு.. அலறிய டெல்லி... பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 08, 2022, 12:51 PM IST
பீக் ஹவரில் பயங்கர துப்பாக்கி சூடு.. அலறிய டெல்லி... பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

சுருக்கம்

போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்த்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி அங்கிருந்து தப்ப முயற்சி செய்தனர். 

மேற்கு டெல்லியை அடுத்த சுபாஷ் நகர் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு சகோதரர்கள் காயமுற்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

துப்பாக்கி சூட்டில் காயமுற்ற நிலையில், கெஷோபுர் மண்டி முன்னால் தலைவர் அஜய் சௌத்ரி மற்றும் அவரின் சகோதரர் ஜஸ்ஸா சௌத்ரி இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளை போலிசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வாங்கி, குற்றவாளிகளை பிடிக்கும் போலிசார் திட்டமிட்டுள்ளனர். 

மருத்துவமனை:

தாக்குதலுக்கு ஆளான சௌத்ரி திகார் கிராமத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது சகோதரருடன் மருத்துவமனையில் உறவினரை பார்க்க காரில் சென்று கொண்டு இருந்தார். கார் சுபாஷ் நகர் இண்டர்செக்‌ஷன் பகுதிக்கு வந்ததும், மர்ம நபர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சூடு சம்பவம் முழுக்க அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் வீடியோவாக பதிவாகி இருக்கிறது.

வீடியோ காட்சிகளின் படி, வெள்ளை நிற கார் சாலையின் நடுவே நின்று கொண்டிருக்கிறது. அப்போது இரண்டு பேர் காரை சுற்று வெவ்வேறு திசைகளில் நின்று கொண்டு, காரினுள் இருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்த்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி அங்கிருந்து தப்ப முயற்சி செய்தனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிலர் தங்களின் கார்களை அப்படியே யு-டர்ன் எடுத்து திரும்பி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

விசாரணை:

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் விரைந்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். பின் அங்கிருந்தவர்கள் காயமுற்ற சௌத்ரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். துபாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடிக்க அங்கிருந்து சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மூத்த காவல் துறை அதிகாரி கன்ஷ்யம் பன்சால் தெரிவித்தார். 

துப்பாக்கி சூடு நடத்திய பகுதியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தாக்குதலுக்கு ஆளான காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!