கார் மோதி கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்.. IT அதிகாரியின் கள்ளக்காதலி ஓட்டியது அம்பலம்..!

By vinoth kumarFirst Published Dec 10, 2020, 7:52 PM IST
Highlights

வருமானவரித்துறை அதிகாரியின் காரை கள்ளக்காதலி ஓட்டி வந்த போது ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

வருமானவரித்துறை அதிகாரியின் காரை கள்ளக்காதலி ஓட்டி வந்த போது ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்தவர் கௌஷீப் (28). 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள கௌஷீப் வழக்கம்போல் நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றுவிட்டு, ஸ்கேன் ரிப்போர்ட்டை துணிக்கடைக்குச் சென்று கணவரிடம் காண்பித்துவிட்டு வீட்டு ரங்கதாஸ் காலனி மெயின் ரோடு வழியாக வீட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த வருமானவரித் துறை போர்டு பொருத்திய கார் அதிவேகமாக வந்து கர்ப்பிணியின் பின்னால் பலமாக மோதியது. இதில் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்ட கௌஷீப், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய பெண் அங்கிருந்து  கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றுவிட்டார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் போலீசார், கர்ப்பிணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து ஏற்படுத்திய கார் வருமானவரித்துறை அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்தது சென்னை கொளத்தூரை சேர்ந்த ரூபாவதி(40) என தகவல் வெளியாகியுள்ளது. இவர் வருமானவரித்துறை அதிகாரியின் கள்ளக்காதலி என்பதும் தினமும் அவரது வீட்டுக்கு வருமானவரித்துறை அதிகாரி தனது காரை அனுப்பி சாப்பாடு வாங்கி வர சொல்வது வழக்கம் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் ஓட்டுநர் அரிவிந்த் என்பவர் காரில் ரூபாவதி வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர், ரூபாவதி தனது கள்ளக்காதலனான வருவமானவரித்துறை அதிகாரிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதிகவேகமாக காரை ஓட்டிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலை சென்றுக்கொண்டிருந்த கர்ப்பிணி மீது மோதியது தெரியவந்துள்ளது. 

click me!