2 குழந்தையின் அப்பா செய்யுற வேலையா இது.. வீடு புகுந்து கலெக்டர் ஆபீஸ் ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

Published : Apr 06, 2022, 01:36 PM IST
 2 குழந்தையின் அப்பா செய்யுற வேலையா இது.. வீடு புகுந்து கலெக்டர் ஆபீஸ் ஊழியரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்க திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். 

திருவண்ணாமலையில் 9ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

அரசு ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.  இவருக்க திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். 

பாலியல் வன்கொடுமை

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம்  பேச்சு கொடுத்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

போக்சோ சட்டத்தில் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து, ரமேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

வருஷத்தின் முதல் நாளிலேயே பதற வைக்கும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் ட்ரோனை அனுப்பிய அட்டூழியம்..!
பர்கா போட்டு சுத்தினா தப்பிச்சிரலாமா? சிறுமியைச் சீரழித்துவிட்டு பெண் வேடத்தில் சுற்றிய கான்ஸ்டபிள் கைது!