சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி..!

Published : Mar 27, 2019, 11:09 AM IST
சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி..!

சுருக்கம்

கோவை அருகே நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவந்துள்ளது.

கோவை அருகே நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவந்துள்ளது. 

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை திப்பனூரை சேர்ந்தவர் பிரதீப் (30). லாரி டிரைவர். இவரது மனைவி வனிதா (26). இவர்களது 6 வயது மகள் ரித்னாஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இது தொடர்பாக உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை பிரதீப் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள சந்தில் ஒன்றில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். 

இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குழந்தையின் உறவினர்கள் 300-க்கும் மேற்பட்டோர் துடியலூர் சிக்கனலில் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பர்கா போட்டு சுத்தினா தப்பிச்சிரலாமா? சிறுமியைச் சீரழித்துவிட்டு பெண் வேடத்தில் சுற்றிய கான்ஸ்டபிள் கைது!
திருநங்கைக்கு 25 இடங்களில் அரிவாள் வெட்டு! சாக்கடையில் வீசிய லாரி டிரைவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!