திருச்சி அருகே பள்ளி மாணவி எரித்துக் கொலை.!! தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவங்கள்.!

Published : Jul 06, 2020, 11:49 PM ISTUpdated : Jul 06, 2020, 11:54 PM IST
திருச்சி அருகே  பள்ளி மாணவி எரித்துக் கொலை.!! தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவங்கள்.!

சுருக்கம்

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியின் உச்சத்தை தந்துள்ளது.  திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டையில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியின் உச்சத்தை தந்துள்ளது. 
திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டையில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டையில் ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் அளித்தனர்.  பொது மக்களின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  போலீசாரின் விசாரணையில் அந்த மாணவி அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், 9ம் படித்து வந்தவர் என்பதும் தெரியவந்ததுள்ளது.

 

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாணவி மதியம் 1 மணி வரை அவரது விட்டில் இருந்ததாகவும், மாலையில் சடலமாக பார்த்ததாகவும் உறவினர்கள் தெரிவித்து  வருகின்றனர்.மேலும் கொலை செய்யப்பட்ட மாணவியின் அருகே மண்ணெண்ணெய் கேனும், தீப்பெட்டியும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தடயங்கள் ஏதும் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக தடயவியல் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை கொடூரமாக கொலை செய்த நபரை கைது செய்யும் வரை அவ்விடத்தை விட்டு செல்லப் போவதில்லை என மாணவியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவி கொலைக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இதைத் தொடர்ந்து திருச்சி சரக டி.ஜ.ஜி. ஆனி விஜயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்  திருச்சி அதவத்தூர் பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவி தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க டிஸ்பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் கொரோனா கொடூரத்தை விட பாலியல் பலாத்கரம் கொலை சம்பவம் அரங்கேறி வருவது  பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாதது அச்சத்தில் ஆழ்த்தி வருகின்றது.
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி