பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி படுகொலை... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

Published : Jul 08, 2019, 05:41 PM IST
பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி படுகொலை... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

சுருக்கம்

தூத்துக்குடியில் பட்டப்பகலில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வடிவேல் முருகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வடிவேல் முருகன் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அந்த மரம் நபர்கள் பள்ளியில் புகுந்து ஆசிரியர் வடிவேல் முருகனை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த வடிவேல் முருகன் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரது மைத்துனர் அற்புத செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, ஆசிரியர் வடிவேல்முருகனை, அவரது மைத்துனர் அற்புதசெல்வம் என்பவரே கத்தியால் குத்திக்கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்