பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு . அமெரிக்காவில் பயங்கரம்.

Published : May 25, 2022, 01:30 PM IST
பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு: ரத்த வெள்ளத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு . அமெரிக்காவில் பயங்கரம்.

சுருக்கம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 குழந்தைகள் உட்பட 18 பேர் கொடூரமாக பலியாகியுள்ளனர்.  

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 குழந்தைகள் உட்பட 18 பேர் கொடூரமாக பலியாகியுள்ளனர். இதில் இன்னும் ஏராளமானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுடைய வாலிபர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிக்கூடங்களில் சைகோ கில்லர்களால் நடத்தப்படும் துப்பாக்கி சூடுகள் அதனால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடரும் துயரமாக உள்ளது. இந்த வரிசையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம்  உவால்டே  என்ற பகுதியில் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது, அப்பள்ளியில் திடீரென 18 வயதுடைய நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தான், அதில் 15 பச்சிளம் குழந்தைகள் துப்பாக்கி குண்டுக்கு சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை தடுக்க வந்த ஆசிரியர்கள் மீதும் அந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

அதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். மற்ற குழந்தைகள் அலறினர், மேலும் அந்த நபர் துப்பாக்கியால் குழந்தைகள் மீது  தாக்குதல் நடத்த முயற்சித்தார் ஆனால் மற்ற குழந்தைகள் பத்திரமாக பள்ளிக்கூட அறைகளுக்குள் சென்றதால் அவர்கள் தப்பினர். இந்த படுகொலையார் பள்ளிக்கூட வளாகமே ரத்த காடாக மாறியது. அதில் பலர் காயமடைந்தனர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் அவர்களைத் துப்பாக்கியால் சுட்ட 18 வயது வெறி பிடித்த வாலிபனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மற்ற பள்ளிகளும் மூடப்பட்டன. துப்பாக்கிச் சூடு தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டதால் அங்கு பதட்டம் அதிகரித்தது. குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் அங்கு கதறி அழுதனர். இந்த துயர சம்பவம் ஒட்டு மொத்த உலகையில் உலுக்கியுள்ளது.  அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது, இங்கு இதுவரை 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.  கடந்த ஆண்டை காட்டிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் கூட 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் துப்பாக்கி சம்பவங்களும் அதனால் பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு கொடூரங்களும் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது. அடிக்கடி ரத்தவெறி பிடித்த சைக்கோ கில்லர்களால் மாணவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி