14 வயது மாணவியை பல முறை கற்பழித்த 17 வயது மாணவன் !! கர்ப்பமானதால் அதிர்ச்சி !!

Published : Jun 28, 2019, 09:13 PM IST
14  வயது மாணவியை பல முறை கற்பழித்த 17 வயது  மாணவன் !! கர்ப்பமானதால் அதிர்ச்சி !!

சுருக்கம்

தஞ்சை அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி 17 வயது மாணவன் ஒருவர் பல முறை கற்பழித்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில்  மஞ்சுளா என்ற மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்  நேற்று வழக்கம் போல பள்ளிக் கூடம் சென்நிருந்தார். பள்ளியில் மாணவி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார். 

இதையடுத்து  ஆசிரியர்கள் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவல் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அதில் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் குமார் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல முறை கற்பழித்தது தெரியவந்தது. இதன் காரணமாக  அந்த  மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி மாணவி மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் ஐடிஐ மாணவர் குமார் மீது போக்சோ சட்டத்தின கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்