
நடந்து சென்ற சிறுமியை பைக்கில் அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 49 வயதை சேர்ந்த ஒருவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் அலிகார் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, அந்த வழியாக 16 வயது சிறுமி ஒருவரிடம், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி தனது பைக்கில் அவரை காவலர் அழைத்து சென்றார்.
சிறிது தூரம் சென்றபின், பைக்கை நிறுத்திய காவலர், அங்குள்ள காலி இடத்துக்கு வலுக்கட்டாயமாக சிறுமியை அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, சிறுமி தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர், சிறுமியை தாக்கினார். இதில் அவர் காயமடைந்தார். இருப்பினும், காவலரிடம் போராடி அங்கிருந்து தப்பிய சிறுமி, தனது வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அலிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த போலீசாரை கைது செய்தனர். இதையடுத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். தற்போது, அந்த சிறுமி பெண் குழந்தைகள்பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.