மிரட்டி அடிக்கடி பலாத்காரம்.. பள்ளி மாணவி 7 மாதம் கர்ப்பம்.. 60 வயது கிழவனின் கேடு கெட்ட செயல்...!

Published : Nov 01, 2020, 12:39 PM IST
மிரட்டி அடிக்கடி பலாத்காரம்.. பள்ளி மாணவி 7 மாதம் கர்ப்பம்.. 60 வயது கிழவனின் கேடு கெட்ட செயல்...!

சுருக்கம்

பள்ளி மாணவியை மிரட்டி  முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பள்ளி மாணவியை மிரட்டி  முதியவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மாணவியை காரணை கிராமத்தை சேர்ந்த கண்ணப்பன் (60) என்பவர் மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லவில்லையாம்.

இதனால், மாணவியை கண்ணப்பன் அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் மாணவியை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த போது மாணவி 7 மாதம் கர்ப்பிணியாக இருப்பதை கண்டு மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். 

அப்போது, மாணவியிடம் விசாரித்ததில் கண்ணப்பன் மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் கண்ணப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 60 கிழவன் மாணவி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்
கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்