ப்ளீஸ் வேணாம் என்னை விட்டுடுங்க.. கதறியும் விடாமல் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த காதலன்.!

By vinoth kumar  |  First Published Mar 11, 2023, 3:16 PM IST

 செல்போன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி  சிறுமியை அந்த இளைஞர் நைசாக வெளியில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். 


காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவி தந்தையின் செல்போனில் இருந்து போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், செல்போன் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி  சிறுமியை அந்த இளைஞர் நைசாக வெளியில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் 3 பேரும் இருப்பதை கண்டு அந்த பள்ளி மாணவி அதிர்ச்சி அடைந்தார். இந்த 4 பேரும் சேர்ந்து அந்த பள்ளி மாணவியை மிரட்டி மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அந்த 4 பேரும் அங்கிருந்து சென்றனர். வீட்டுக்கு வந்த அந்த பள்ளி மாணவியை தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!