வீடியோ காலில் ஆபாச பேச்சு... பள்ளி மாணவியை நிர்வாண வீடியோ! சுற்றி வளைத்த இளைஞர்கள்...

Published : May 07, 2019, 08:05 PM IST
வீடியோ காலில் ஆபாச பேச்சு... பள்ளி மாணவியை நிர்வாண வீடியோ! சுற்றி வளைத்த இளைஞர்கள்...

சுருக்கம்

இளைஞர் பெண்களை மொபைல் போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். ஒரு பெண்ணிடம் அவர் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியபோது அவரை இளைஞர்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் நல்லதம்பி சேலம் அழகாபுரத்தில் உள்ள சலூன்கடையின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பெண்களிடம் நட்பாக பழகி, காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்துள்ளார். பின்னர் அவர்களுடன் செல்போனில் வீடியோ காலில் ஆபாசமாக பேசி, அதை பதிவு செய்துகொண்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.   

அதுமட்டுமல்ல பள்ளி மாணவியிடம் இதேபோல ஆபாசமாக பேசியும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த அந்த பெண்ணின்  தாய் அப்பகுதி்யில் உள்ள பலரிடம் சொல்லி அழுதுள்ளார்.  

இந்நிலையில், வீடியோவை காட்டி ஒரு பெண்ணிடம் பணம் கேட்டு நல்லதம்பி மிரட்டி வந்தபோது, அழகாபுரத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சிலர் நல்லதம்பியை மடக்கி பிடித்து, அடித்து உதைத்து அழகாபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு பெண் மட்டுமே தற்போது போலீசில் புகார் அளித்திருக்கிறார். 

மேலும், நல்லதம்பியால் பாதிக்கப்பட்ட பெண்கள் 35 க்கும்  மேல் இருக்கலாம் என்றும், அவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால் நல்லதம்பிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அப்பதுகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தைக்கு மண்டை உடைப்பு
வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி