
சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டிக் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவதை சமூகவலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருபவர்களை போலீசும் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமங்கலத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான ஆனஸ்ட்ராஜ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் கத்தியால் கேக் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய ஆனஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேதடி வருகிடின்றனர்.