வீட்டிற்கு லேட்டாக வந்த மகளை கண்டித்த தந்தை.. கோபத்தில் கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Jul 31, 2023, 11:40 AM IST

வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக திட்டியதால் தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார் மகள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.


ஹைதராபாத் அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஆம்பர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துளசிராம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, நிகிதா என்ற பெண் அப்சல்கஞ்சில் உள்ள ஒரு கடையில் பழங்கள் விற்பனை செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு தாமதமாக வந்ததால், பெண்ணின் தந்தை ஜெகதீஷ் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த நிகிதா ஆத்திரத்தில் ஒரு கூர்மையான பொருளை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்தார்.

Tap to resize

Latest Videos

ஞாயிற்றுக்கிழமை தொண்டையில் ஏற்பட்ட குத்தலால் ஜெகதீஷ் பலத்த காயம் அடைந்து ஒஸ்மானியா மருத்துவமனையில் இரத்தப்போக்கு காரணமாக இறந்தார்” என்று கூறப்படுகிறது. ஜெகதீஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மகளுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அம்பர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நிகிதா மீது இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்தனர். தந்தையை மகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!