அடுத்த அதிரடி... சிறார் பாலியல் வீடியோ விவகாரம்...!! கைது பட்டியிலில் டாக்டர்கள் , தொழிலதிபர்கள்...??

Published : Dec 16, 2019, 01:06 PM ISTUpdated : Dec 16, 2019, 01:08 PM IST
அடுத்த அதிரடி... சிறார் பாலியல் வீடியோ விவகாரம்...!!  கைது பட்டியிலில்  டாக்டர்கள் , தொழிலதிபர்கள்...??

சுருக்கம்

 டாக்டர்கள் ,  உள்ளிட்ட  15 பேரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது .    

சிறார் பாலியல் வீடியோக்கள் கைது பட்டியலில் மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன,  இந்த தகவல் முக்கிய புள்ளிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .  சமீபகாலமாக பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன ,  இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .  ஆனாலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை . 

இந்நிலையில்  சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கான  காரணம் அதிக அளவில் ஆபாசம் வீடியோக்கள் பார்ப்பதனால் ஏற்படும் ஒருவித மனபிறழ்வே  என கண்டிறியப்பட்டுள்ளது.  இந்நிலையில்  சிறார் பாலியல் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் அதை பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் குழந்தைகள் பாலியல்  வீடியோக்களை பதிவேற்றம் செய்வது.  அல்லது  ஷேர் செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர்.  

 

தற்போது தயாராகி உள்ள கைதுப் பட்டியலில் பெரிய பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் மருத்துவர்கள் முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள்  இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சிறார் பாலியல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை பரப்பியதாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் .  எனவே  சிறார் பாலியல் வீடியோ வழக்கில் முதல் கைது நடவடிக்கை ஆக உள்ளது  .  இச்சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ,  இந்நிலையில் சிறார் பாலியல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதை பகிர்ந்தது தொடர்பாக தொழிலதிபர்கள் ,  டாக்டர்கள் ,  உள்ளிட்ட  15 பேரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது .  

அதாவது திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர்  முகநூல் பக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் அவரை  பின் தொடர்ந்துள்ளனர் .  அவர்களுக்கும்  அந்த வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளது,  அவர்களும் அதை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளனர் இந்நிலையில்  கிறிஸ்தவரின் தொடர்பில்  இருந்த  அந்த 300 பேர் யார் யார் அவர்களின் முகவரி என்ன என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். 

 

 இவர்களில் 15 பேர் அதிக அளவில் சிறார் பாலியல் வீடியோக்களை பகிர்ந்திருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்   இந்நிலையில் அவர்களுக்கு  எதிரான ஆதாரங்களை திரட்டி கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .    இந்த பதினைந்து பேரில் தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் சமூகத்தில் கவுரவமான அந்தஸ்தில் உள்ள முக்கிய புள்ளிகளும்  இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .  எனவே அவர்களை கைது செய்வதில்  சில அரசியல் நெருக்கடிகள் சவால்கள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!