புகார் கொடுக்க சென்ற 25 வயது பழங்குடியின பெண்ணை புரட்டி எடுத்து நாசம் செய்த 59 வயது எஸ்.ஐ..!

By vinoth kumarFirst Published May 7, 2022, 12:44 PM IST
Highlights

சிறிது தூரம் பைக்கை ஓட்டிச் சென்ற ஜூக்தீஸ் பிரசாத் அப்பகுதியின் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை, மறுபடியும் திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கே கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

மாமியார் மீது புகார் அளிக்க சென்ற பழங்குடியின பெண்ணை போலீஸ் எஸ்ஐ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகார் கொடுக்க சென்ற பெண்

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பால்டா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜூக்தீஸ் பிரசாத் (59) என்பவரிடம், கடந்த ஜனவரி மாதம் 25 வயதுடைய பழங்குடியின பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தனது மாமியார் கொடுமை செய்து வருவதாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இவ்விவகாரத்தை விசாரித்து வந்த ஜூக்தீஸ் பிரசாத், விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். 

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இருந்தும் அவரது மாமியார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தப் பெண்ணை, ஜூக்தீஸ் பிரசாத் பார்த்துள்ளார். அப்போது, 'உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். காவல் நிலையதற்கு அழைத்து செல்ல வந்துள்ளேன். எனவே எனது பைக்கில் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பலாத்காரம்

அந்த பெண்ணும் அவரது பைக்கில் ஏறினார். சிறிது தூரம் பைக்கை ஓட்டிச் சென்ற ஜூக்தீஸ் பிரசாத் அப்பகுதியின் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை, மறுபடியும் திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டிற்கே கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது கணவரிடம் அந்தப் பெண் கூறினார். 

பாலியல் பலாத்காரம்

அதிர்ச்சியடைந்த அவர் ஜலாவர் காவல்துறை கண்காணிப்பாளர் மோனிகா சென்னிடம் புகார் அளித்தார். அவர் நேரடி விசாரணை நடத்தியதில் போலீஸ் எஸ்ஐ ஜூக்தீஸ் பிரசாத், சம்பந்தப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பாலியல் பலாத்காரம், கடத்தல், எஸ்சி-எஸ்டி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது. தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வுபெறவுள்ள நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸ் எஸ்ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!