ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஜெய்சால்மர் பகுதியிலிருந்து பார்மர் நோக்கி காரில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தனர். மேலும், காரில் வேகமாக செல்வதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
இளைஞர்கள் சிலர் மதுபோதையில் கார் ஓட்டியபடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக வீடியோ எடுத்த போது விபத்தில் சிக்கி தாய், மகன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஜெய்சால்மர் பகுதியிலிருந்து பார்மர் நோக்கி காரில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தனர். மேலும், காரில் வேகமாக செல்வதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ஜெய்சால்மர் மாவட்டத்தின் தேவிகோட் என்ற இடத்தில் மனீஷ் (13) என்ற சிறுவனும், அவரது தாய் மென்கலா என்பவரும் சாலையை கடக்க முயன்ற போது அதிகவேகமாக வந்த கார் மோதியது. மேலும் பசுமாடு மீது மோதி நின்றது.
undefined
இதையும் படிங்க;- ராஜஸ்தானின் கோட்டாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன?
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனீஷ், மென்கலா மற்றும் குடிபோதையில் காரில் பயணம் செய்த ரோஷன் கான், பவானி சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். குடிபோதையில் காரை ஓட்டிய டிரைவரும், காரில் பயணம் செய்த மற்றொரு நபரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- லிங்கை க்ளிக் செய்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.. 20 லட்சத்தை ஆன்லைனில் இழந்த இளைஞர்.. உஷார்!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.