பப்ஜி கேம் விளையாடுபவர்களே உஷார்... சிறுவனின் உயிரை பறித்த பப்ஜி..!! சோகத்தில் ஈரோடு மக்கள்.!!

By T BalamurukanFirst Published May 19, 2020, 9:39 PM IST
Highlights

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கோயம்புத்தூர் சுங்கம் சிந்தாமணி பகுதியை சேர்ந்த சாகுல்ஹமீது என்ற கல்லூரி மாணவர் தொடர்ந்து 6மணி நேரம் பப்ஜி கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த குமார் மகன் சதீஸ்குமார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சதீஸ்குமார் அவரது செல்போனில் பப்ஜி கேம்மினை ஆன்லைனில் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், சதீஸ்குமார் நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தைத் திடலில் உட்கார்ந்து பப்ஜி விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோனை செய்தனர். சதீஸ்குமார் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பப்ஜி கேம் க்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

click me!