துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிய போராளிகள்... சுய விளம்பரத்திற்காக செய்தால் இதுதான் கதி!!

By sathish kFirst Published Dec 25, 2018, 10:03 AM IST
Highlights

தன் சுய விளம்பரத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு  சென்ற பெண் போராளிகளை விரட்டி விரட்டி அடித்துள்ளனர். துண்டைக்காணோம் துணியைக் காணோம் என ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது. ஆனால் பக்தர்கள், இந்து அமைப்பினர் என பெரும்பாலானோர் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஐப்பசி மாத நடை திறப்பையொட்டி ஏராளமான பெண்கள் சன்னிதானம் செல்ல புறப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பெண்களை ஒரு கட்டத்துக்கு மேல் பக்தர்கள் மேற்கொண்டு செல்லவிடவில்லை. இதனால் அவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பெண்கள் நேற்று முன்தினம் சபரிமலை சென்றனர்.  போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய அவர்கள் ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் போராட்டத்தால் 11 பெண்களுக்கும் மலையேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 11 பேரும் திரும்பி விட்டனர்.  

ஏன் அவங்கள எல்லாரும் துரத்துறாங்க? துரத்தும்போது ஓடிவரும் பெண்களில் ஒரு பெண் கேட்கிறார். "தோழர் செல்வி எங்க?", "தோழர் செல்வி எங்க?" அப்டிங்குற சபரிமலை வீடியோ பாத்தேன். அவங்க கோயிலுக்குள் தரிசனம் செய்யப் போகணும்னு போனவங்களா இல்ல அங்க சுய விளம்பரம் செய்துகொள்ள எதுவும் போராட்டம் பண்ண போனவங்களா? என என்ற சுயவிளம்பரம் தான் என அனைத்து தரப்பு மக்களும் பகிரங்கமாக கூறி வருகின்றனர். அதுமட்டுமா, விரட்டியடிக்கப்பட்ட இவர்கள் ஐயப்ப பக்தர்களா? எவருடைய நெற்றியிலும் சந்தன குங்குமப் பொட்டு இல்லை. போலி பக்தர்கள், போராளிகள் திரும்ப அனுப்பப் பட்டது சரியே என வீடியோ பார்த்த அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி கடவுளை உணருவார்? சபரிமலையில் அமைதியை கெடுக்க போகும் இவர்களை போன்ற கூட்டத்திற்கு  இது சரியான பதிலடி என சொல்கிறார்கள். 

சாமி இருக்கிறதோ இல்லையோ பக்தி என்ற சொல் ஒரு சுய ஒழுக்கத்தை கொடுத்தது உண்மை; அந்த பயத்தால் இந்தச் சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஒழுக்கமாக இருந்தார்கள். தற்போது சுய விளம்பரத்திற்காக ஒரு மதத்தின் இறை நம்பிக்கையை கெடுத்து நடத்தும் இப்படியான போராட்டம் தேவையா? நீங்கள் தான் போராளியா? என மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த போராளிகளை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்

click me!