இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர்... சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி லட்சக்கணக்கில் சம்பாதித்த கொடுமை!!

Published : Mar 15, 2019, 10:52 AM IST
இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர்...   சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி லட்சக்கணக்கில் சம்பாதித்த கொடுமை!!

சுருக்கம்

சென்னையில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய, தொழிலதிபர்  சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர், 7வது தெருவில் உள்ள அபார்ட்மெண்டில் சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த சினிமா நிறுவனத்திற்கு இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்வதாக அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள் விரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி, போலீசார் சம்பந்தப்பட்ட அபார்ட்மெண்ட் அருகே சாதாரண உடையில் நோட்டமிட்டு வந்தனர். அப்போது, அந்த சினிமா தயாரிப்பு கம்பெனிக்கு  இளம் பெண்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் வந்து செல்வது தெரிந்தது. உடனே போலீசார் அதிரடியாக அடுக்குமாடி அபார்ட்மெண்டில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்குள் நுழைத்து சோதனை நடத்தினர். 

அப்போது அறைகளில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜபெருமாள், நாமக்கல் பகுதியை சேர்ந்த புரோக்கர்கள் பாலாஜி, மதுரவாயல் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த புரோக்கர் சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து 3 இளம்பெண்களையும் மீட்டனர். 

பின்னர் 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜபெருமாள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருக்கானி மூவிஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அவர், சினிமாவில்  நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை ஆசை வார்த்தையில் பேசி, செய்து புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதாக  ஆசை காட்டி அவர்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பெரிய பெரிய பணக்காரர்களுக்கு விருந்தாக்கி பல லட்சம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.

அதேபோல, இவர்கள் ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஹீரோயின் ஆசை கூறி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

PREV
click me!

Recommended Stories

7 வருஷ காதல்.. கடைசியில இப்படியா? திருமணம் செய்ய மறுத்த காதலனைப் பழிவாங்கிய காதலி!
திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!