கொரோனா வார்டில் 2 நாட்களாக கர்ப்பிணி பெண் பலாத்காரம்... இறுதியில் நேர்ந்த கொடுமை..!

By vinoth kumarFirst Published Apr 13, 2020, 5:58 PM IST
Highlights

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மகத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாங்கேபஜாரில் உள்ள ரோஷன்கஞ்சைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பிறகு கொரோனா வார்டுக்கு அந்த கர்ப்பிண பெண் மாற்றப்பட்டார். பின்னர், மார்ச் முதல் வாரத்தில் வீடு திரும்பினார்.  மூன்று நாட்களுக்கு பிறகு அந்த பெண் வீட்டில் திடீரென உயிரிழந்தார். 
 
பீகாரில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சுகாதாரத்துறை ஊழியரால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். 

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மகத் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாங்கேபஜாரில் உள்ள ரோஷன்கஞ்சைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பிறகு கொரோனா வார்டுக்கு அந்த கர்ப்பிண பெண் மாற்றப்பட்டார். பின்னர், மார்ச் முதல் வாரத்தில் வீடு திரும்பினார்.  மூன்று நாட்களுக்கு பிறகு அந்த பெண் வீட்டில் திடீரென உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பாக விசாரித்த போது  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினரும் ஒரு மருத்துவமனை ஊழியர் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக இறந்த பெண்ணின் மாமியார் கூறுகையில் மருத்துவமனையின் கொரோனா வார்டில் தங்கியிருந்தபோது மருமகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு ரத்தபோக்கு அதிகமாகி அவரது வயிற்றில் இருந்த குழந்தை நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் பலாத்காரம் செய்ததாக மருமகள் என்னிடம் கூறினார். நிலைமை மோசமானதால் வீட்டுக்கு அனுப்பி விட்டனர் என்றார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் துண்புறுத்தல் வழக்கில் சுகாதார ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!