சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரம்..! 8 வெளிநாட்டினர் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 10:53 AM IST
Highlights

சுற்றுலா விசாவில் இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவர்கள் அனுமதியின்றி ஊரடங்கை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் ஜெய்லானி (42). இவரது மனைவி சித்தி ரொகானா (45). இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் 6  பேருடன் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அங்கிருக்கும் பல்வேறு பள்ளிவாசல்களுக்கு சென்று மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின் மீண்டும் மார்ச் 24ஆம் தேதி ராமநாதபுரம் வந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய சோதனையில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து கொரோனோ நோய்தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டபோது பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி 8பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவர்கள் அனுமதியின்றி ஊரடங்கை மீறி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உதவியதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மூமின் அலி, அசரப் அலி, முகமது காசிம் ஆகியோர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் மூமின் அலி மற்றும் வெளிநாட்டினர் 8 பேரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். பின் அவர்கள் அனைவரும் தனியார் விடுதி ஒன்றில் சிறைபடுத்தப்பட்டுள்ளனர்.

click me!