1 கோடிக்கு டீல் பேசி முடிக்கப்பட்ட சிலை!! சினிமா ஹீரோ போல வந்து அலேக்காக அமுக்கிய பொன்.மாணிக்கவேல்!

By sathish kFirst Published Dec 23, 2018, 8:45 PM IST
Highlights

முருகன் ஐம்பொன் சிலையை ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட நிலையில் சினிமா பட பாணியில் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக நுழைந்து தடுத்து நிறுத்தினர்.
 

சென்னை கிண்டியை அடுத்த ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் சிலை 1 கோடி ரூபாய்க்கு  டீல் பேசி வருவதாக சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு  தகவல்கள் வெளியானது.

இதையடுத்து  பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது சிவகுமார், தேவனடிகள், முகேஷ் ஆகிய 3 பேரை கூண்டோடு சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டது. முதலில் அந்த சிலையை மண்ணில் இருந்து தோண்டி எடுத்ததாக சிவகுமார் தெரிவித்தார். 

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன் அரக்கோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் இருந்து  கடத்தப்பட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். இவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் நீண்ட தாடியுடன் சாமியார் போல கோயில்களில் வலம் வந்த தேசனடிகள் மூலம் இந்த சிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.  

இந்த சிலையை குமரியைச் சேர்ந்த முகேஷ் செனஅனை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து ரூ. 1 கோடிக்கு டீல் பேசியது தெரியவந்தது. 

click me!