பார் நாகராஜ் தான் எங்கள் தலைவன்!! புட்டு புட்டு வைத்த திருநாவுக்கரசு!! இவ்வளவு அட்டூழியங்களா?

By sathish kFirst Published Mar 16, 2019, 12:19 PM IST
Highlights

சிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள திருநாவுக்கரசு  எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான். அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம் என பலதகவல்களை கூறியுள்ளார்.

சிபிசிஐடி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள திருநாவுக்கரசு  எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான். அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம் என பலதகவல்களை கூறியுள்ளார்.

பொள்ளாச்சி செக்ஸ் மாஃபியா கும்பல் கடந்த 7 வருடங்களாக செய்து வந்த அட்டூழியங்கள் தமிழகத்தை கதிகலங்க வைத்துள்ளது.  இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட விட்டுள்ளது. இதுல முக்கிய குய்ற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை  செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

செக்ஸ் மாஃபியா கும்பல் தலைவன் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில்; அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன்  உள்பட 20 பேர் நாங்க ஒரே கேங்காக சுற்றுவோம். பார் நாகராஜ் தான் எங்கள் தலைவன் . மாமூல் அதிகமாக கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் நாகராஜ் வைத்ததுதான் சட்டம்.

அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன், சதீஷ், வசந்தக்குமார் உள்பட 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் உருவாகினர். எங்க கேங்கல எல்லாருமே அதிமுகக்காரங்கதான். நாங்கள் ஒரே கேங்காக கூடி, சுற்றுவோம். மது அருந்துவோம். எல்லா கெட்ட பழக்கங்களும் எங்களுக்கு ஏற்பட்டது. எங்களுக்கு தலைவராக இருந்தது பார் நாகராஜ்தான். 

முதலில் 1  பார் தான்கிடைத்தது, அதைத் தொடர்ந்து 3 பார் கிடைத்தது. நகரில் பார் திறக்காத நேரம் காலை 6 மணிக்கே பாரை திறந்து மது விற்பனை செய்து வந்தார். நகரில் வேறு பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் திறந்தால் போலீசுக்கு தகவல் கொடுப்பார்.  

ஆனால் பார் நாகராஜை கண்டு கொள்ள மாட்டார்கள். இதனால் கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிரந்தரமாக அனுமதி இல்லாத பார் நடத்தத் தொடங்கினார். போலீசாருக்கும் முறையாக மாமூல் கொடுத்தார். இதனால் போலீசார் இவரை கண்டு கொள்ள மாட்டார்கள். அதிகமாக மாமூல் கொடுத்ததால், போலீஸ் நிலையத்தில் பார் நாகராஜ் வைத்ததுதான் சட்டம். இதனால் நாங்கள் பிரச்னைக்கு பார் நாகராஜை தொடர்பு கொண்டோம். இதனால் போலீஸ் நிலையத்தை கட்டப்பஞ்சாயத்து இடமாக மாற்றிக் கொண்டார். எங்களுக்கு போலீசுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்துவந்தோம் எனக் கூறினார்.

மேலும், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் பார் நாகராஜ் உள்ளிட்ட 20 பேருக்கு இந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசுவிடம் உள்ள செல்போனில் உள்ள படங்களை வைத்தும், வாக்குமூலத்தில் கூறியவர்களையும் கைது நடவடிக்கைகளை தொடர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதும், பல முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என தெரிகிறது.

click me!