பொள்ளாச்சி பண்ணை வீட்டு கதவை உடைத்து போலீஸ் சோதனை !! கட்டுக்கட்டாக சிக்கிய ஆணுறைகள்…. ஆபாசப் படங்கள் !!

Published : Mar 13, 2019, 08:20 PM ISTUpdated : Mar 14, 2019, 08:21 AM IST
பொள்ளாச்சி பண்ணை வீட்டு கதவை உடைத்து போலீஸ் சோதனை !!  கட்டுக்கட்டாக சிக்கிய ஆணுறைகள்…. ஆபாசப் படங்கள்  !!

சுருக்கம்

முகநூல் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில், அவர்கள ஆபாச படம் எடுத்த பண்ணை வீட்டின்  கதவை உடைத்து  போலீசார் சோதனை செய்ததில் அங்கு கட்டுக்கட்டாக ஆணுறைகளும், ஆபாச வீடியோக்களும் கைப்பற்றப்பட்டன.

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம்  என்ற கிராமத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது.  இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். 

10 க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பண்ணை வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து போலீசார் பண்ணை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  சோதனையிட்டனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சோதனை முடிவில் பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும், வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகள் வாங்கி வைத்திருந்தனர். வீட்டை சுற்றிலும் ஏராளமான ஆணுறைகள் கிடந்துள்ளன. 
 
இதற்கிடையில், சோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். இது வழக்கமான சோதனை தான், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் இது குறித்து ஏதும் சொல்ல முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதே போல் திருநாவுக்கரசின் கூட்டாளிகளில் ஒருவரான சதீஸ் என்பவருடைய தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையிலும் போலீசார் சோதனையிட்டனர். 

அதே நேரத்தில் இநத வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை சிபிசிஐடி தனது கையில் எடுத்துள்ளது. மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்