மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை திருட்டு! கட்டப்பையில் வைத்து கொண்டு சென்ற பெண்.?தட்டி தூக்கிய போலீஸ்

Published : Jul 04, 2022, 04:04 PM IST
மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை திருட்டு! கட்டப்பையில் வைத்து கொண்டு சென்ற பெண்.?தட்டி தூக்கிய போலீஸ்

சுருக்கம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை சிசிடிவி காட்சி உதவியோடு போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து குழந்தை திருட்டு

மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படும் நிகழ்வு கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. குழந்தைகளை கடத்தி விற்கும் கொடூரம் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது பொள்ளாச்சி மருத்துவமனையில இருந்து பிறந்த பச்சிளம் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குமரன் நகரை  திவ்ய பாரதி பிரசவத்திற்காக கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு  முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பு முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர்.  இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திவ்யபாரதி அசந்து தூங்கியுள்ளார்.

மேம்பால பணியில் புதையல்.! பழங்காலத்து நகைகளை காட்டி ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில கும்பல்

சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளியை தேடிய போலீஸ்

திடீரென கண் விழித்த பார்த்த போது அருகில் இருந்த குழந்தை காணமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அருகில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கேயும் குழுந்தை தொடர்பான தகவல் கிடைக்கவில்லை இதனையடுத்து உடனடியாக காவல்நிலையில்  புகார் அளித்துள்ளார். குழந்தை திருட்டு போனது தொடர்பான புகார் கிடைத்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணையி்ல இறங்கினர். மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அருகில் இருந்த பள்ளிவாசல்  கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது  கல்லூரி மாணவிகள் போல் வந்த இரு பெண்கள் குழந்தையை கட்டப்பையில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது.  

போலி ஆதார் கார்டு அச்சடித்த பிடெக் பட்டதாரி..! அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி

குற்றவாளி கைது

மேலும் அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 6 தனிப்படைகளை அமைத்து உத்தவிட்டார். இதனையடுத்து காவல்துறையின் தீரவி தேடுதல் வேட்டையில் கோவையில் வைத்து குழந்தையை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு பெண்ணை தேடி வருகின்றனர். இதனையடுத்து பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார் குழந்தையை பத்திரமாக  தாய் திவ்ய பாரதியிடம்  ஒப்படைத்தனர். குழந்தை திருடப்பட்டு 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினரை, உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். குழந்தையை கண்டுபிடிக்க சிசிடிவி முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்த போலீசார், அனைத்து இடங்களிலும் சிசிடிவி அமைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்

நேரம் காலம் இல்லாமல் கணவர் ஓயாத டார்ச்சர்... மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை.. அனாதையான குழந்தை.!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!