கல்லூரி மாணவர் திடீர் மரணம்...! ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்ற கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

By Ajmal KhanFirst Published Jul 18, 2022, 3:59 PM IST
Highlights

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். 
 

கல்லூரி மாணவர் மர்ம மரணம்

தமிழகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பட் போதைப்பொருட்கள் விற்பனையும் ஆன்-லைனில் கொடிகட்டி பறக்கிறது. அந்தவகையில் போதைப்பொருளை வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி விடுதியில் அறையில் இருந்த அஜய்குமார் மயக்கடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியான அஜய்குமார் நண்பர்கள் அங்கிருந்த சக மாணவர்கள் உதவியோடு அஜய்குமாரைதனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அஜய்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

Explainer:கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி இறந்த விவகாரம்! குற்றவாளிகள் யார்? முழு தகவல்!

போதை மருந்தை சாப்பிட்ட மாணவர் பலி

அதில் அவர் நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்தை எடுத்துக்கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயழிலப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை தலைவர் பத்ரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டது. அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் சக மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்திய போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையத்து விசாரணையை தீவிரபடுத்திய போலீஸார் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில் கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் என்பவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆடர்களை பெற்று கொரியர் மூலமாக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து  கும்பகோணம் சென்ற தனிப்படை போலீசார் முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதையத்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம்..! தந்தையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

click me!