'சினிமாவில் நடிக்க வைக்கிறேன்.. ஆனா'..? ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை சீரழித்த போட்டோ கிராபர்..!

Published : Feb 18, 2020, 04:06 PM ISTUpdated : Feb 18, 2020, 04:13 PM IST
'சினிமாவில் நடிக்க வைக்கிறேன்.. ஆனா'..? ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை சீரழித்த போட்டோ கிராபர்..!

சுருக்கம்

போட்டோ கிராபராக இருப்பதால் சினிமா துறையில் பல இயக்குனர்களை தெரியும் என்றும் அதன்மூலம் படங்களில் நடிக்கவைப்பதாக ரேகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதைநம்பிய ரேகா, தனிமையில் பல விதமாக போஸ் கொடுக்க, அதை ஜிஷ்ணு படம்பிடித்துள்ளார். அந்த நேரங்களில் இருவரும் நெருக்கமாக இருந்ததையும் ஜிஷ்ணு படம் பிடித்து வைத்துள்ளார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிஷ்ணு(28). போட்டோ கிராபராக தொழில் பார்த்து வருகிறார். இவருக்கும் துடியலூரைச் சேர்ந்த ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

போட்டோ கிராபராக இருப்பதால் சினிமா துறையில் பல இயக்குனர்களை தெரியும் என்றும் அதன்மூலம் படங்களில் நடிக்கவைப்பதாக ரேகாவிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதைநம்பிய ரேகா, தனிமையில் பல விதமாக போஸ் கொடுக்க, அதை ஜிஷ்ணு படம்பிடித்துள்ளார். அந்த நேரங்களில் இருவரும் நெருக்கமாக இருந்ததையும் ஜிஷ்ணு படம் பிடித்து வைத்துள்ளார். பின் அவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி ரேகாவிடம் ஜிஷ்ணு பணம் பறிக்க தொடங்கியுள்ளார்.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!

அவரது மிரட்டலுக்கு பயந்து கேட்கும் நேரங்களில் எல்லாம் ரேகாவும் பணத்தை வாரியிறைத்திருக்கிறார். இந்தநிலையில் நேற்று மாலை அவரை தொடர்பு கொண்ட ஜிஷ்ணு தனக்கு ரூ.1½ லட்சம் பணம் வேண்டும் என மீண்டும் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என ரேகா கூறவே, அவரின் படங்கள் அனைத்தையும் வெளியிட்டு விடுவதாக ஜிஷ்ணு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேகா, உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜிஷ்ணுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஜிஷ்ணு மீது வழக்கு பதியப்பட்டு விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். இதுபோன்று ஆசைகாட்டி வேறு பெண்களிடம் பணம் பறித்திருக்கிறாரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!