போலீஸ் ’விசாரணை’க்குப் பின்னர் கழிவறையில் வழுக்கி விழுந்த படம்...பெட்ரோல் பங்கில் வெட்டியவர்...!

Published : Dec 30, 2018, 02:34 PM IST
போலீஸ் ’விசாரணை’க்குப் பின்னர்  கழிவறையில் வழுக்கி விழுந்த படம்...பெட்ரோல் பங்கில் வெட்டியவர்...!

சுருக்கம்

சிதம்பரம், அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை பணத்திற்காக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு,  பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கைது செய்யபட்ட முக்கிய குற்றவாளி கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு உடைந்தது. இவர் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிதம்பரம், அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை பணத்திற்காக அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு,  பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கைது செய்யபட்ட முக்கிய குற்றவாளி கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு உடைந்தது. இவர் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் அருகேயுள்ள புதுச்சத்திரத்தில், அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், பெட்ரோல் பங்க் ஒன்று இயக்கி வருகிறது. 

இந்நிலையில்  இந்த பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர்  பெட்ரோல் போட்டுகொண்டு கொண்டு உரிய பணத்தை கொடுத்துள்ளனர்.

அப்போது பெட்ரோல் போட்ட ஊழியர், அருகில் இருந்தவர்கள் வேலை நிமித்தமாக விலகி சென்றதை நோட்டமிட்ட  மூன்று பேரும் பெட்ரோல் போட்ட ஊழியரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் அவர் பணப்பையை விடாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஊழியரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர். 

இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்க் ஊழியத்திற்கு  தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மற்ற ஊழியர்கள் காயமடைந்த ஊழியரை மருத்துவமனையில்ர அனுமதித்தனர்.

இதற்கிடையில் அங்கிருந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவா, மணிகண்டன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் வாகன சோதனையில் புதுச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடிபட்டார். 

இவர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி,  ஒருவர் கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறித்துக்கொண்டதாக ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் ’விசாரணை’க்குப் பின்னர் அவர் கழிவறையில் வழுக்கி விழுந்திருப்பதாகத் தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!