தனிக்குடித்தனம் போக பிடிவாதம் பிடித்த மனைவி … பாதிரியார் செய்த கொடூர செயல்!!

Published : Oct 24, 2018, 07:36 PM IST
தனிக்குடித்தனம் போக பிடிவாதம் பிடித்த மனைவி … பாதிரியார் செய்த கொடூர செயல்!!

சுருக்கம்

சேலம் அருகே தனிக்குடித்தனம் போக வேண்டும் என மனைவி பிடிவாதம் பிடித்ததால் மனமுடைந்த பாதிரியார் ஒருவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை கொண்டார். அவரை காப்பாற்றச் சென்ற மனைவியும் தீயில் கருகி பரிதாபமாக  உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியில் ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் பாதிரியாராக இருந்து வந்தார்.  இவரது மனைவி ஜெர்சி. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த  ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் ஜெர்சி கர்ப்பமடைந்தார். இதையடுத்து பிரசவத்துக்காக ஜெர்சி தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

தற்போது  குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் ஜெர்சியை, ரிச்சர்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் உங்க அப்பா, அம்மா கூட இருக்க முடியாது. தனிக்குடித்தனம் போகலாம் என்றால் மட்டும் நான் அங்கு வருகிறேன் என ஜெர்சி கண்டிப்புடள் சொல்லி விட்டார். இது தொடர்பாக ரிச்சர்டு தனது மனைவியிடம் பல முறை கெஞ்சியிருக்கிறார்.

ஆனால் மனமிரங்காத ஜெர்சி நானும் , குழந்தையும் அங்கு வர முடியாது என பிளாக் மெயில் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த ரிச்சர்டு, மனைவியின் வீட்டு முன்பு திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த ஜெர்சியும் பலத்த தீ காயமடைந்தார். இருவரையும் மீட்ட அப்பகுதியினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதலில் ஜெர்சியும், அதைத் தொடர்ந்து பாதிரியார் ரிச்சர்டும்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேவாலயத்தில் அன்பு, சகிப்புத் தன்மை போன்றவற்றை கற்றுத் தரும்  பாதிரியார்களே ஆத்திரமடைந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு