கட்சி அலுவலகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி....

Published : Mar 22, 2019, 09:08 AM IST
கட்சி அலுவலகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி....

சுருக்கம்

கல்லூரியின் ஆண்டு விழா தொடர்பாக மலர் தயாரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வந்த மாணவியை அக்கட்சியின் தொண்டர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள செய்தி கேரளவில் பரபரப்பாகியுள்ளது.

கல்லூரியின் ஆண்டு விழா தொடர்பாக மலர் தயாரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வந்த மாணவியை அக்கட்சியின் தொண்டர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள செய்தி கேரளவில் பரபரப்பாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட செர்புளசேரி பகுதியில் கடந்த 16-ந்தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அதன் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரே அந்த குழந்தையை பெற்றெடுத்து வீசிச்சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்த  போலீசார்  அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 10 மாதங்களுக்கு முன் தான் படித்த  கல்லூரியின் ஆண்டு  விழா மலர் தயாரிப்பதற்காக செர்புளசேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த இளம் கட்சித்தொண்டர் ஒருவர் தன்னை கற்பழித்ததாகவும், அதன் மூலம் உருவானதுதான் இந்த குழந்தை எனவும் போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவர்கள், இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண்ணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகவும், அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் உள்ளூர் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் ஒன்றில் பெண் தொண்டர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவத்தை கண்டித்து செர்புளசேரி கட்சி அலுவலகம் நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள் கற்பழிப்பு மையங்களாக மாறி வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..