பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

Published : Aug 01, 2022, 02:25 PM ISTUpdated : Aug 01, 2022, 02:26 PM IST
பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

சுருக்கம்

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் பட்டப்பகலில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுவை ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் சாலமன் (23). பெயிண்டர். இவர் பிரியதர்ஷினி என்பவரை ஏப்ரல் மாதத்திற்கு முன் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை சாலமன் நாவற்குளம் பகுதியில் உள்ள டீக்கடை நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். இதை பார்த்ததும் உயிர் பயத்தில் சாலமன் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை அக்கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சாலமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

இதையும் படிங்க;- பிரிந்து சென்ற காதல் மனைவி!ஏக்கத்தில்மச்சினிச்சிக்கு பிராக்கெட் போட அக்கா புருஷன் செய்த வேலையை நீங்களே பாருங்க

தகவலறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர், சாலமன் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது. அதை கைப்பற்றி, அது யாருடையது? என்பதை ஆய்வு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், புதுச்சேரி கோரிமேடு அடுத்த தமிழகப் பகுதியான நாவற்குளத்தை சேர்ந்த ரவுடி ரகு உள்ளிட்ட 7 பேர் கும்பல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. ரகு மீது தமிழகப் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சாலமனும், ரகுவும் நண்பர்கள் ஆவர். நண்பர்களில் ஒருவருக்கு ரகு பணம் கொடுத்துள்ளார். பணத்தை திரும்பத் தராததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நண்பருக்கு ஆதரவாக சாலமன் செயல்பட்டுள்ளார். இதனால் சாலமனுக்கும், ரகுவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், சாலமன் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதையும் படிங்க;-  டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!

PREV
click me!

Recommended Stories

சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
மருமகளின் தலையை தனியாக துண்டித்த மாமியார்.. நந்தினி மீது எதுக்கு இவ்வளவு கோபம்.! பரபரப்பு தகவல்!