ஆன்லைன் மூலம் பாலியல் தொழில்... சிக்கிய புரோக்கர்கள்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Published : Oct 01, 2018, 03:03 PM ISTUpdated : Oct 01, 2018, 03:05 PM IST
ஆன்லைன் மூலம் பாலியல் தொழில்... சிக்கிய புரோக்கர்கள்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

சுருக்கம்

கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும், தனித்தனியாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இதில் 3 வீடுகளுக்கு மட்டும் அடிக்கடி வெளியூர் ஆட்கள் வந்து சென்றனர். சிலர் ஆடம்பர கார்களிலும் வந்து இறங்கினர்.

கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும், தனித்தனியாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இதில் 3 வீடுகளுக்கு மட்டும் அடிக்கடி வெளியூர் ஆட்கள் வந்து சென்றனர். சிலர் ஆடம்பர கார்களிலும் வந்து இறங்கினர்.

மேலும், 3 வீடுகளில் இருந்து அழகான பெண்களும் அவ்வப்போது வெளியே சென்று வந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் நோட்டமிட ஆரம்பித்தனர். அப்போதுதான், 3 வீடுகளிலும் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் நேற்று மாலையில் அந்த 3 வீடுகளுக்கும் சென்றனர்.

அப்போது 2 வீடுகளில் 3 புரோக்கர்களும், ஒரு வீட்டில் 3 அழகிகளும் இருந்தனர். மேலும் அங்கு ‘ஸ்வைப் மெஷினும்’, கட்டுக்கட்டாக பணமும் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். அழகிகளில் 2 பேர் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அழகிகளை மீட்ட போலீசார், கடலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து புரோக்கர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். 

அதில், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மேகலை, எழிலரசி, வந்தவாசியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் என்பதும், 3 பேரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. புரோக்கர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடு தகவல்கள் வெளியானது. புதுச்சேரியில் பாலியல் தொழில் நடத்த பல போட்டிகள் நிலவியது. அதனால் புதுச்சேரி, தமிழக எல்லையான பெரியகாட்டுப்பாளையத்தில் 3 வீடுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். 

தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை ஈடுபடுத்தி, ஆன்-லைன் மூலம் பாலியல் தொழில் நடந்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரொக்கமாகவும், ‘ஸ்வைப் மெஷின் மூலமாகவும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிந்தது.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..