தாய் , மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை!! கோவையில் நடந்த பயங்கர சம்பவம்...

Published : Jan 20, 2019, 08:46 AM ISTUpdated : Jan 20, 2019, 08:48 AM IST
தாய் , மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை!! கோவையில் நடந்த பயங்கர சம்பவம்...

சுருக்கம்

கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் அந்தோணிதாஸ், தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,‘இந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடு’ எ 12 வருடங்கள் முதுகுவலியால் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், குடும்பத்தினரை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததாலும், இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொன்ன அவர், ஆவியாக வந்து நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என்றும் எழுதியிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?