வீடியோ காலில் நிர்வாண போஸ்... சபலப்பட்ட ஆணிடம் பணத்தை மிரட்டி பறித்த தில்லாலங்கடி பெண்..!

Published : Dec 03, 2019, 03:14 PM ISTUpdated : Dec 03, 2019, 03:15 PM IST
வீடியோ காலில் நிர்வாண போஸ்... சபலப்பட்ட ஆணிடம் பணத்தை மிரட்டி பறித்த தில்லாலங்கடி பெண்..!

சுருக்கம்

மனிஷா, ராம்குமாரின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு தினமும் பேச ஆரம்பித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீடியோ காலில் பேச தொடங்கினர். பின்னர், அப்போது மனிஷா, ராம்குமாரிடம், உனது நிர்வாண உடலை காண்பிக்கும்படி கூறினார். அதன்படி ராம்குமாரும் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக நின்றபடி போஸ் கொடுத்தார்.

வீடியோ காலில் பேசிய பெண்ணிடம் நிர்வாணமாக போஸ் கொடுத்து ரூ.41 ஆயிரம் இழந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு மடிவாளா வெங்கடபுராவை சேர்ந்தவர் ராம்குமார் (39). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆன்லைன் வலைதளம் வாயிலாக மனிஷா அகர்வால் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் தங்கள் புகைப்படத்தை பகிர்ந்துக் கொண்டனர். 

இதையடுத்து மனிஷா, ராம்குமாரின் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு தினமும் பேச ஆரம்பித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இருவரும் வீடியோ காலில் பேச தொடங்கினர். பின்னர், அப்போது மனிஷா, ராம்குமாரிடம், உனது நிர்வாண உடலை காண்பிக்கும்படி கூறினார். அதன்படி ராம்குமாரும் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக நின்றபடி போஸ் கொடுத்தார். 

இதை அவருக்கு தெரியாமல் மனிஷா வீடியோ பதிவு செய்து கொண்டார். சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை ராம்குமாருக்கு அனுப்பிய மனிஷா, எனக்கு தேவைப்படும் போதுதெல்லாம் பணம் கொடுக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் பதற்றம் அடைந்த ராம்குமார், அவர் கேட்டபோதெல்லாம் பணத்தை வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார். இதுவரை மொத்தம் ரூ.41 ஆயிரம் வரை அந்த பெண் மிரட்டி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் செல்போன் எண்ணை வைத்து, இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அது வெவ்வேறு மாநிலத்தை காண்பித்துள்ளது. மேலும் போலியான முகவரியை கொடுத்து வங்கி கணக்கு தொடங்கியதும் தெரியவந்தது. தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!