கல்லாவில் காசு இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன்!! என்ன செஞ்சிருக்கான் பாருங்க !!

Published : Aug 02, 2019, 10:14 PM IST
கல்லாவில் காசு இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன்!! என்ன செஞ்சிருக்கான் பாருங்க !!

சுருக்கம்

கடலூர் அருகே கடையை உடைத்து திருட வந்த திருடன் கல்லாவில் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்து கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம்  நெய்வேலி மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ளது அரிமா மளிகை. நேற்று இரவு இந்த கடையின் ஓட்டை உடைத்து உள்ளே சென்று திருடும்போது பணம் எதுவும் கிடைக்காததால் திருடன் கடும் ஏமாற்றமடைந்தான்.

 திருடன். பணம் கிடைக்காத கோபத்தில் கடையிலிருந்த  பொருட்களை உடைத்து  சேதபடுத்திய திருடன் கடையின்  உரிமையாளரை திட்டி கடிதம் எழுதியுள்ளான்.

அதில் உயிரைப் பணயம் வைச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவ தொடச்சு வைச்சு என்னை ஏமாற்றலாமா..அதுக்குத்தான் இந்த குரங்கு வேலை என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இன்று காலை கடையை திறந்ததும் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!
ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்